கொங்குநாட்டு மங்கல வாழ்த்துப்பாடல்
கொங்குநாட்டு பஞ்சவர்ண ராஜாக்களான(கொங்கு தேச ராஜாக்கள்) வேட்டுவக்கவுண்டர் சமுதாயம்
"வடக்கு வளநாடு வாழவந்திப்பட்டணம் திருக்கச்சிராஜன்,திருவேடராஜன்,காவலராஜன்,மாவலராஜன் ,பூவலராஜன் ஆகிய ஐந்து ராஜாக்களும் சேர்ந்து அரசாட்சி செய்யும் நாளையில் சேரன்,சோழன்,பாண்டியன் மூவரையும் பிடித்து சிறைக்கூடத்தில் வைத்த உத்தண்டன்,அச்சுதன்,பரசுராமன்,களப்பாலன் ஆகிய நான்கு ராஜாக்களையும் எதிர்த்துப் போர் செய்து வெற்றி கனிந்து சிறப்பு பெற்று வந்த வேடுவராஜக்களுடைய காணியும் பூமியும் கொங்குநாடு என்று கல்வெட்டுச் சாசனம் செய்து வடக்கு காஞ்சி காளேஸ்வரிக்கும்,தெற்க்கே மதுரைக் கோட்டை தலை வாசலுக்கும்,கிழக்கேவாளையாற்றுக்கும்,மேற்க்கே வெள்ளியங்கிரி மலைக்கும் நாலாச்சதுரம் மத்தியில் ஆண்டிருக்கும் நாளையில் பெண்ணுக்கும்,மாப்பிளைக்கும் கல்யாணம் செய்ய வேண்டுமானால் பாலக்கால் போட்டு பதினாறு பந்தக்கால் நட்டு பச்சைப்பந்தல் தோரணங்கள் கட்டி பேய்க்கரும்பு கொண்டுவந்து மணவறை சோடித்து மணவாளப் பந்தலிலே வெள்ளைகுடையும்,வெங்கலக்குடையும்,பூச்சரக்குடையும் பஞ்சவர்ணவிருதும் பட்டணமே கட்டி கத்தி கட்டிய சமுதாடும் முத்தாலாத்தியும் முத்துப்பவளமும் ஏகமாய் பரப்பி தங்கத்தினால் பூணூலும் போட்டு பொறுமைக்கு தர்மராஜரானால்,போருக்கு வீமராஜரானால்,வில்லுக்கு விஜயராஜரானால்,சொல்லுக்கு அரிச்சந்திரரானால், கொடைக்கு கர்ணரானால் மகமேற்கு சரிசமமாய் எச்சிலிட்ட கண்ணப்ப நாயனார் குருகுல கோத்திரமே "

